October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் போட்டிகளில் வெற்றிபெற்ற நடால்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஏடிபி அந்தஸ்து பெற்ற ஆயிரம் போட்டிகளில் வெற்றிபெற்ற உலகின் நான்காவது வீரராக ஸ்பெய்னின் ரஃபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் சகநாட்டு வீரரான பெலிஸியானோ லோபேஸை எதிர்த்தாடினார்.

போட்டியின் முதல் செட்டை 6-4 எனும் கணக்கில் பெலிஸியானோ லோபேஸ் கைப்பற்றி சவால் விடுத்தார். ஆனாலும், இரண்டாம் செட்டை மிகுந்த சவாலுக்குப் பின்னர் 7-6 என நடால் தன்வசப்படுத்தினார்.

மீண்டும் ஆதிக்கம் செலுத்திய அவர் மூன்றாவது செட்டில் 6-4 என முன்னிலை பெற்று வெற்றியீட்டினார். இது ஏடிபி அந்தஸ்துடைய டென்னிஸ் தொடர்களில் நடால் பெற்ற ஆயிரமாவது போட்டி வெற்றியாகும்.

இதுவரை 1201 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 201 தோல்விகளை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் ஜிம்மி கோனர்ஸ் (1274 வெற்றி), சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் (1242 வெற்றி), செக்.குடியரசின் இவான் லென்டில் (1068) ஆகியோர் ஆயிரம் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களாக வரலாறு படைத்துள்ளனர்.