சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் மென்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 எனும் கோல் கணக்கில் இஸ்தான்புல் கழக அணி அபாரவெற்றி பெற்றது.
“எச்” குழுவுக்கான இந்த போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் முதல் பாதியில் இஸ்தான்புல் கழக அணி 12 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் பெற்றது.
தொடர்ந்து பிஸ்கா 40ஆவது நிமிடத்தில் கோலடிக்க முதல் பாதியில் 2 கோல்களை இஸ்தான்புல் கழக அணி பெற்றது. மென்செஸ்டர் யுனைடட் கழக அணி சார்பாக மார்டியல் 43ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
- https://tamilavani.com/sports/4771/
- https://tamilavani.com/sports/6834/
- https://tamilavani.com/others/6611/
இதற்கமைய முதல் பாதியில் 2-1 எனும் கோல் கணக்கில் இஸ்தான்புல் கழக அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரண்டு அணி வீரர்களாலும் கோலடிக்க முடியவில்லை. அதற்கமைய 2-1 எனும் கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடட் அணி தோல்வியடைந்தது.
சம்பியன்ஸ் லீக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் புள்ளிகள் பட்டியலில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மென்செஸ்டர் யுனைடட் அணி இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இஸ்தான்புல் கழக அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் இருக்கிறது.