January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம்: லிவர்பூல் அபார வெற்றி

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் அட்லான்டா கழக அணிக்கு எதிரான போட்டியில் 5-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் கழக அணி அபார வெற்றி பெற்றது.

டியாகோ ஜொடா ஹெட்ரிக் கோலடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 16, 33, 54 ஆவது நிமிடங்களில் கோலடித்தார்.

மொஹமட் சாலா 47 ஆவது நிமிடத்திலும் சாடியோ மென் 49 ஆவது நிமிடத்திலும் லிவர்பூல் அணிக்கு கோல்களை ஈட்டிக்கொடுத்தனர்.

அட்லான்டா கழக அணி வீரர்களால் போட்டி முழுவதும் ஒரு கோலைக்கூட போட முடியவில்லை. முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்த லிவர்பூல் கழக அணி இரண்டாம் பாதியில் மேலும் 3 கோல்களை எட்டி வெற்றியை தனதாக்கியது.

டியாகோ ஜொடா 10 போட்டடிகளில் 7 கோல்களைப் போட்டு இந்தப் போட்டி பருவ காலத்தில் தனது கோல்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொண்டார்.

லிவர்பூல் கழக அணி “டி” குழுவில் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

அட்லான்டா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்திலுள்ளது.