அவுஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷின், உலகக் கிண்ணம் மீது கால் வைத்திருக்கும் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கிடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்டங்களின் போது, அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷின் வெற்றிக் கிண்ணம் மீது கால் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தப் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்தப் படம் வைரலாகியுள்ளதுடன், பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.