January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது!

Photo: Twitter/Cricket Australia

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி இடம்பெற்றறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண போட்டிகளில் 6ஆவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.