January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

Photo: International Cricket Council

2023ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இந்தப் போட்டியில் மோதவுள்ளன.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 9 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் பலமான அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து, அதிலும் வென்று இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் அவுஸ்திரேலியாவும் ஆரம்ப சுற்றில் இந்தியாவிடம் 6 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.

எவ்வாறாயினும் விறுவிறுப்புக்கு பஞ்சமிலலாத போட்டியாக இறுதிப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா விளையாடுவது இது 8வது முறையாகும். அதில் 5 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

இதேவேளை இந்தியா 3 இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டு முறை கிண்ணத்தை வென்றுள்ளது.