April 10, 2025 22:12:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ண கிரிக்கெட்‌ பாடல்‌ வெளியானது!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது.

ஒக்டோபர்‌ 05 ஆம்‌ திகதி தொடக்கம் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியா ஏற்று நடத்தும் இப்போட்டியைப் பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடலில் பொலிவுட் நடிகர் ரண்வீர் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.