January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா – 13,000 ஓட்டங்களை கடந்தார் கோஹ்லி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிமை மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி இந்திய அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், 24.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டி இடைநிறுத்தப்பட்டு, திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் மீண்டும் போட்டி ஆரம்பமானது.
இதன்படி போட்டி தொடர்ந்த நிலையில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராஹுல் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி இருவரும் சதங்களை பூர்த்தி செய்திருந்தனர்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 356 ஓட்டங்களைப் பெற்றது.

மேலும், இந்த போட்டியில் 98 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்து விராட் கோஹ்லி சாதனை படைத்தார்.

இந்நிலையில், பதிலுக்கு 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்கள் நிறையில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதேவேளை சூப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.