January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆசிய கிண்ணம்”: கொழும்புக்கு வெளியே போட்டிகளை நடத்த ஆராய்வு!

தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் ஆசிய சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை கொழும்புக்கு வெளியே நடத்துவதற்கு ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கொழும்பிலேயே போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தற்போது கொழும்பில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையில், குறித்த போட்டிகளை கண்டி பல்லேகல மற்றும் அம்பாந்தோட்டை சூரியவெவ ஆகிய மைதானங்களில் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு கொழும்பில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையிலேயே இவ்வாறு ஆராயப்படுகின்றது.

கொழும்பில் நடைபெறும் போட்டிகளுக்காக அதிகளவில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில் கிரிக்கெட் பேரவை நெருக்கடிகளுக்கு உள்ளாகலாம் என்றும் கூறப்படுகின்றது.