January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகளிடம் தோற்ற இந்தியா!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி சனிக்கிழமை பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்படி நான்கு வருடங்களின் பின்னர் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது.