
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் லீட்ஸ் கழக அணிக்கு எதிரான போட்டியில் 4-1 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி கழக அணி வெற்றிபெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை சவாலாக ஆரம்பித்த லெஸ்டர் சிட்டி கழக அணி சார்பாக இரண்டாவது நிமிடத்தில் பார்னெஸ் கோலடித்தார். தொடர்ந்து டீல்மென்ஸ் கோல் போட லெஸ்டர் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
லீட்ஸ் கழக அணி வீரர்களால் முதல் பாதியில் கோலடிக்க முடியாது போக 2-0 என லெஸ்டர் அணி முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி மூன்றாவது நிமிடத்தில் அதாவது 48 ஆவது நிமிடத்தில் லீட்ஸ் அணி முதல் கோலை எட்டியது. டாலஸ் அந்த கோலை அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.
ஆனால், லீட்ஸ் அணி அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்தும் பந்தை தனது ஆதிக்கத்தில் வைத்திருந்த லெஸ்டர் அணி சார்பில் விளையாடிய ஜேமி வேர்டி 76 ஆவது நிமிடத்தில் அணியின் மூன்றாவது கோலையும் பதிவுசெய்தார்.
https://tamilavani.com/others/5888/
https://tamilavani.com/sports/6834/
https://tamilavani.com/others/7335/
போட்டி நிறைவை எட்டி உபாதைக்கான மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் டீல்மென்ஸ் கோலடிக்க லெஸ்டர் அணி 4 கோல்களை போட்டது . எனினும், லீட்ஸ் அணி வீரர்களால் கோல் எல்லையை நெருங்க முடியவில்லை.
இறுதியில் 4-1 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் லெஸ்டர் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 15 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.