January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசமானது!

Photo: Twitter/ England Cricket

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

அவுஸ்திரேலியாவின் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமான டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூட் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், இங்கிலாந்து வீரர் சாம் கரண் பந்து வீச்சில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.