Photo: Facebook/ WaninduHasaranga
சர்வதேச டி-20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
52 சர்வதேச டி- 20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க இந்தப் போட்டிகளில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் டி-20 உலகக் கிண்ண போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன்படி ஐசிசியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் மீண்டும் வனிந்து ஹசரங்க முதலிடம் பெற்றுள்ளார்.