December 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தற்போது அவுஸ்திரேலியாவின் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி போட்டியில் இந்தியா, சிம்பாப்வே அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நியுஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதில் மோதவுள்ளன.

அத்துடன் 10 ஆம் திகதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.