January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசியக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி!

Photo: Twitter/ Sri Lanka Cricket 

மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் இலங்கை அணி மோதவுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 123 என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இதற்கமைய 14 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.