January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பரிசுத் தொகைகள் அறிவிப்பு!

Photo: Twitter/ T20WorldCup

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி-20 கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை ஐசிசியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலக்கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்களும், அரையிறுதியில் வெளியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.

ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அணிகளுக்கு பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.