Photo: Twitter/Sri Lanka Cricket
இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவியில் இருந்து அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி விலகத் தீர்மானித்துள்ளார்.
2021 மார்ச் முதலாம் திகதி முதல் இவர் இலங்கை அணியின் பணிப்பாளராக இவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்தது.
இலங்கை கிரிக்கெட்டின் தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் டொம் மூடி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சில காரணங்களுக்காக பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.