January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல!

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணிக்காக பயிற்றுவிப்பு ஆலோசகராக, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபரில் டி-20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது அவர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி ஒக்டோபர் 2 ஆம் திகதி அவுஸ்திரேலியா புறப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து ஒக்டோபர் 6ஆம் திகதி தொடக்கம் போட்டிகள் முடிவடையும் வரையில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகரா மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.