May 2, 2025 21:03:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல விலகினார்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விலகியுள்ளார்.

மும்பை இந்தியன் அணியில் அவருக்கு புதிய பதவியொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி  நிர்வாகத்தினால் மஹேல ஜயவர்தனவுக்கு ”உலகளாவிய செயல்திறன் தலைவர்” என்ற பதவியுடன் அந்த அணியின் கீழுள்ள மூன்று அணிகளுக்கும் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் புதிய வீரர்கள் தேர்வு தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் வழங்கியுள்ளனர்.

இதன்படி அவர் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அந்த இடத்திற்கு சஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.