Photo: Twitter/ BCCI
ஆசிய கிண்ணத்திற்கான டி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 2 ஆவது லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் மொஹமட் ரிஸ்வான் 42 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும், இப்திக்கார் அஹ்மட் 22 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் 4 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளுக்கு 33 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளுக்கு 35 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அத்துடன் விராட் கோலியும் 35 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 3 விக்கெட்டுக்களையும், நஸீம் சாஹ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் சகலதுறைவீரரான ஹர்திக் பாண்டியா தெரிவாகினார்.
WHAT. A. WIN!#TeamIndia clinch a thriller against Pakistan. Win by 5 wickets 👏👏
Scorecard – https://t.co/o3hJ6VNfwF #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/p4pLDi3y09
— BCCI (@BCCI) August 28, 2022