ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சனிக்கிழமை ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெட்டியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. துடுப்பட்டத்தில் பானுக ராஜபஷ 38 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் ஆப்கான் வீரர் பஷால் பாறுக்கீ 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டி ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவிலான ரசிகர்கள் நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் பார்வையிடும் போட்டியாக இது அமையும் என்று கூறப்படுகின்றது.