January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பிளே ஓப்” சுற்று : பெங்களூர்- டெல்லி இன்று களத்தில்

(Photo:BCCI/IPL)

ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எனினும் பிளே ஓப் சுற்றுக்கான அணிகள் தெரிவில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

முக்கிய ஆட்டமொன்றில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி நேரடியாக பிளேவ் ஓப் சுற்றை உறுதிசெய்துகொள்ளும்.

ஆனாலும், இன்று தோல்வியடையும் அணியினதும், கொல்கத்தாவினதும் பிளே ஓப் சுற்று வாய்ப்பை நாளை நடைபெறவுள்ள ஹைதராபாத் – மும்பை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் முடிவே தீர்மானிக்கும்.

அதாவது நாளை ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தால் இன்று தோல்வியடைந்த அணியும்இ கொல்கத்தாவும் பிளே ஓப் சுற்றை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஒருவேளை, சன்ரைசஸ் அணி வெற்றிபெற்றால் இன்று தோல்வியடையும் அணிக்கு அது சிக்கலாகிவிடுமம்.

ஏனெனில், இன்று தோல்வியடையும் அணியும் (டெல்லி – பெங்களூர் ) கொல்கத்தாவும் அதேவேளை, நாளை வெற்றிபெற்றால் சன்ரைஸும் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

ஆகவே நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையிலேயே பிளே ஓப் சுற்றுக்கான இரண்டு அணிகள் தெரிவாகும். நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் கொல்கத்தா முன்னேறிச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

சன்ரைசஸ் அணியும் சிறந்த ஓட்ட வேகத்தில் வெற்றிபெற்றால் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் அணிக்கு அது பெரும் தலையிடியாகிவிடும்.

எனவே, பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கெபிடெல்ஸ் அணிகளுக்கு இன்றைய ஆட்டம் வெற்றி தோல்வியை மாத்திரமன்றி நிகர ஓட்ட வேகத்தையும் கணிக்கும் என்பதால் அதற்கேற்ப விளையாட வேண்டிய நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

(Photo:BCCI/IPL)

டெல்லி அணி தாம் விளையாடிய முதல் 10 ஆட்டங்களில் ஏழு வெற்றிகளைப் பெற்றது. ஆனால், அதன் பிறகு விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணிக்கும் இதேநிலைமை தான். ஒரு வெற்றியைப் பெற்றால் பிளே ஓப் சுற்று என்றிருந்தாலும் அடுத்தடுத்து தோல்விகளே கிடைத்தன.

எவ்வாறாயினும்,  இன்றைய வாய்ப்பு இவ்விரண்டு அணிகளுக்கு கடைசி சந்தர்ப்பமாகும்.

இதில் வெற்றிபெற்று பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற இரண்டு அணிகளுமே போராடும்.

ஆனால் அணி வீரர்கள் செயற்பாடுகளைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் பெங்களூர் அணி வெற்றிபெற கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

டெல்லி அணி ககிஸோ ராபாடா எனும் தனி ஒருவரை வைத்துக்கொண்டு விராத் கோஹ்லி,  ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இரண்டு பெரும் துடுப்பாட்ட சக்திகளை சமாளிக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சுக்கு மொஹமட் ஸிராஜ், யுஸ்வேந்திர சகால் ஆகியோர் பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாகும்.