Photo: Facebook/ Yupun Abeykoon
பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை வீரரான யுபுன் அபேகோன், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெங்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் மூன்றாமிடத்தை பெற்று வெங்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதன்படி பொதுநலவாய போட்டிகளில் சுவட்டு போட்டிகளில் இலங்கைக்கு பதக்கம் வென்றுக்கொடுத்த நான்காவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று 1998ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இலங்கை வீரர் ஒருவர் சுவட்டு போட்டியொன்றில் பதக்கம் வென்ற சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.
இதேவேளை, ஆண்களுக்கான வட்டு எறிதல் பாரா தட கள விளையாட்டு போட்டியில் கலந்த கொண்ட இலங்கை வீரர் பாலித பண்டார வௌ்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.