May 27, 2025 20:07:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது இலங்கை!

Photo: Twitter/OfficialSLC

அவுஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் வியாழக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஒவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து டக்வெல்த் – லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 216 என்ற வெற்றி இலக்கு அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 37.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.

இதற்கமைய, ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளன.
மூன்றாவது போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.