June 15, 2025 18:40:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆரோன் பின்ச் – டேவிட் வோர்னர் அதிரடி: இலங்கைக்கு படுதோல்வி!

கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வென்று, முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 70 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.