Photo: Twitter/IPL
15 ஆவது ‘ஐபிஎல்’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குஜராத் மாநிலம் – ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ‘ராஜஸ்தான் ரோயல்ஸ்’ அணியும் மோதவுள்ளன.
2022 ஆம் ஆண்டின் ‘ஐபிஎல்’ கிரிக்கெட் திருவிழா மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதன் முடிவில் இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கவுள்ளன. இதில் கிண்ணத்தை வெல்லப் போவது யார் என்பதனை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
ஐபிஎல் தொடரில் இம்முறை அறிமுகமான குஜராத் அணி, தனது முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.