June 15, 2025 13:44:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குயின்ஸ்லேண்ட், டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சைமண்ட்ஸ் பயணித்த கார், ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் மட்டுமே பயணம் செய்துள்ளார் என்று குயின்ஸ்லேண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46 வயதுடைய எண்ட்ரூ சைமண்ட்ஸ், அவுஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஆண்டில் முன்னாள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அடுத்ததாக சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை ரசிகர்களை மேலும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.