October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல்-2022 போட்டிகள் ஆரம்பமாகின!

Photo: Twitter/IPL

2022 ஆம் ஆண்டின் ‘இந்தியன் பிரிமியர் லீக்’ (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது.

இம்முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் புதிதாக அறிமுகமாகியுள்ளன.

இதனால் தொடரில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு முதல் லீக் போட்டி ஆரம்பமானது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதேவேளை, மே 29 ஆம் திகதி வரையில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டி அட்டவணையை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.