January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐபிஎல்’ டி20 போட்டி அட்டவணை வெளியானது!

Photo: iplt20.com

‘ஐபிஎல்’ டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதன்படி, லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணையை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.