Photo: Twitter/ BCCI
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப்பின் மொகாலியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியானது இந்திய வீர் விராட் கோலிக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்போது முதலில் ரோஹித் சர்மாவும், மாயன்க் அகர்வாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
இதில் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்த போது லஹிரு குமாராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மற்றைய வீரரான மாயன்க் அகர்வால் 33 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில் விராட் கோலி 4 ஆவது வீரராக களமிறங்கினார். ஹனும விஹாரியுடன் இணைந்து விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.
இதன்போது தனது டெஸ்ட் போட்டிகளில் 8,000 ஓட்டங்களை கடந்து அவர், சாதனை புரிந்தார்.
இதன்படி டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6 ஆவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் 45 ஓட்டங்களுடன் அவர், ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் 8000 ஓட்டங்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.@imVkohli breaches another milestone on his momentous day.
8000 and counting runs in whites for him 👏👏#VK100 @Paytm #INDvSL pic.twitter.com/EDZz9kPZwy
— BCCI (@BCCI) March 4, 2022