January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 தரவரிசைப் பட்டியலில் பின்தள்ளப்பட்ட இந்திய வீரர்கள்!

டி-20 வீரர்களின் தரவரிசைப் பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோஹ்லி, 15 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன் இலங்கை வீரரான பெதும் நிஸ்ஸங்க 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தரவரிசை பட்டியலுக்கமைய துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பாபர் அஷாம், பந்துவீச்சாளர் வரிசையில் டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் சகலதுறை வீரர்கள் பட்டியலில் மொஹமட் நபி ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

இதேவேளை இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அணித்தலைவர் ரோஹித் சர்மா 13 ஆவது இடத்தையும், கே.எல்.ராஹுல் 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க பந்துவீச்சாளர் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கும், சகலதுறை வீரர்கள் வரிசையில் 10 ஆவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டுள்ளார்.