January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று போட்டிகளிலும் இலங்கையைத் தோற்கடித்த இந்தியா!

Photo: Twitter/ BCCI

இலங்கையுடனான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்போது இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களை பெற்றார்.

இதனை தொடர்ந்து 147 என்ற ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

இந்திய அணி சார்பில் சிரயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கையுடனான மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது.