January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல் 2022: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் விபரங்கள்!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல், டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகின்றது.

இந்த ஏலப்பட்டியலில் வெளிநாட்டு வீரர்கள் 290 பேர் அடங்கலாக 590 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 10.75 கோடி ரூபாய்க்கு (இந்திய ரூபாய்) வாங்கப்பட்டுள்ளார்.

சர்வதேச டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் வனிந்து ஹஸரங்கவை ஏலத்தில் வாங்குவதற்காக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையான போட்டியில் ஈடுபட்டிருந்தன.

எனினும் இறுதியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை வாங்கியுள்ளது.

இதேவேளை இந்திய அணியின் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடி ரூபாய்க்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 5 கோடி ரூபாய்க்கும், அவுஸ்ரேலிய அணியின் பெட் கம்மின்சை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7.25 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் தக்கவைத்துள்ளன.

அத்துடன் தென்னாபிரிக்கா அணியின் கார்கிஸோ ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடி ரூபாய்க்கும், நியூஸிலாந்து அணியின் ட்ரண்ட் போல்டை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 கோடி கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன. .

தென்னாபிரிக்கா அணியின் குயிண்டன் டி கொக்கை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி 6.75 கோடி ரூபாய்க்கும், அவுஸ்ரேலிய அணியின் டேவிட் வோர்னரை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 6 கோடி கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன.

இந்திய அணியின் குர்ணல் பாண்ட்யாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி 8.25 கோடி ரூபாய்க்கும், அவுஸ்ரேலிய அணியின் மிட்செல் மார்சை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 6.5 கோடி கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் அம்பத்தி ராயுடுவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6.75 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன.