May 15, 2025 21:30:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி!

Photo: Twitter/ BCCI

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியினர் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் சனிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதன்போது நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 44.5 ஓவா்களில் 189 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் பௌலா் ராஜ் பவா அபாரமாக பந்துவீசி 5/31 விக்கெட்டுகளையும், ரவிக்குமாா் 4/34 விக்கெட்டுகளையும், கௌஷல் 1/29 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

தொடர்ந்து 190 என் ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிஷாந்த் 50 ஓட்டங்களும், தினேஷ் 13 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.