Photo: Facebook/IPL
2022 ஆம் ஆண்டுக்கான ‘ஐபிஎல்’ டி20 கிரிக்கெட் போட்டிகளை மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு பிசிசிஐ எதிர்பார்த்துள்ளது.
15 ஆவது ஐபிஎல் தொடரை மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
எனினும், போட்டிகள் நடைபெறும் இடம் குறித்த எந்த அறிவிப்பும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.
இம்முறை ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னௌ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் இம்முறை போட்டிகளை இந்தியாவில் நடத்தவே ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்தியாவில் மார்ச் மாதத்துக்குள் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் இறுதி முடிவு பெப்ரவரி 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றே கூறப்படுகின்றது.
இதேவேளை ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.