January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்பாவேவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றியது இலங்கை!

Photo: Twitter/ Srilanka Cricket

சிம்பாவே அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்படி 3க்கு 2 என்ற வெற்றிகளுடன் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பதிலுக்கு 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாவோ அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் ஜெப்ரி வென்டர்சே 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் இலங்கை அணி 2 போட்டிகளிலும், சிம்பாவே அணி ஒரு போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளன.