January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது போட்டியில் சிம்பாவேவிடம் தோற்றது இலங்கை!

Photo: srilankacricket.lk

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாவே அணி 22 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இலங்கை – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான தொடரின் இரண்டாவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி சிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றது.

303 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 280 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தசுன் சானக்க 102 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார். சர்வதேச ஒருநாள் போட்டியில் அவரது முதலாவது சதம் இதுவாகும்.

இதன்படி இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன.

மூன்றாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.