Photo: Twitter/ Sri Lanka Cricket
சிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
சிம்பாப்வே அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இலங்கை – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சிம்பாவே அணி, 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 296 ஓட்டங்களைப் பெற்றது.
சிம்பாவே சார்பில் சீன் கொலின் வில்லியம்ஸ் 100 ஓட்டங்களையும், ரெஜிஸ் சகப்வா 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 10 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 297 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 300 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக பெதும் நிசங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.