
Photo: Twitter/ Virat Kohli
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்ததை தொடர்ந்தே, தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் விராட் கோலி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
”இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்திய அணியின் தலைவராக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு நாள், டி20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியமை குறிப்பிடத்தக்கது.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022