சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ, அந்தத் தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
தனது ஓய்வு தொடர்பான அறிவித்தலை தான் வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிகெட் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வுப் பெறுவதாக பானுக ராஜபக்ஷ அறிவித்ததை தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் அவருடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானத்தை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இதன்படி தற்போது தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளதாகவும், இலங்கை அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் பானுக ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.