
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
தனது ஓய்வு தொடர்பில் அவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய உடற்தகுதி சோதனை முறைமை தொடர்பான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டே பானுக ராஜபக்ஷ, சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிம்பாபே தொடருக்கான இலங்கை அணியின் இறுதி உடற்தகுதி பரிசோதனை எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.