Photo: Twitter/ AsianCricketCouncil
19 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற இலங்கை அணியுடனான இறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இந்திய இளையோர் அணி வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
போட்டியின் 33 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளுக்கும் 38 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய, 38 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் யசிரு ரொட்ரியோ 19 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 15 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து டக்வொர்த் லூயிஸ் முறையில் 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 21.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அங்கிரிஷ் ரஹுவன்சி 56 ஓட்டங்களையும், ஷாய்க் ரசீட் 31 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.
Fifty from opener Angkrish Raghuvanshi guides India to their third consecutive U19 Asia Cup.
🇱🇰 – 106/9 in 38 Overs (DLS Method)
🇮🇳 – 104/1 in 21.3 Overs (DLS Method)#ACC #U19AsiaCup #SLVIND pic.twitter.com/7WgKTwh7DB— AsianCricketCouncil (@ACCMedia1) December 31, 2021