
Photo: Twitter/ AsianCricketCouncil
19 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 22 ஓட்டங்களால் வீழ்த்தி, துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 44 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் மெதீவ் 4 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய டிசம்பர் 31 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் மோதவுள்ளன.