January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: சம்பியனானது ‘ஜப்னா கிங்ஸ்’

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ‘கோல் கிளாடியேட்டர்ஸ்’ அணியை 23 ஒட்டங்களால் தோற்கடித்து ‘ஜப்னா கிங்ஸ்’ அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.

2021 ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் தொடர் டிசம்பர் 5 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானதுடன், அதன் இறுதிப் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை, சூரியவெ மகிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற  ஜப்னா கிங்ஸ்’ அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

‘ஜப்னா கிங்ஸ்’ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்த அணியில் அவிஷ்க பெர்னாண்டோ 64  ஓட்டங்களை எடுத்தார்.

இதனை தொடர்ந்து 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ‘கோல் கிளாடியேட்டர்ஸ்’ அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி ‘ஜப்னா கிங்ஸ்’  அணி, சம்பியன் கிண்ணத்தை வென்றது.