January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல்: இறுதிப் போட்டிக்கு ‘ஜப்னா கிங்ஸ்’ தகுதி!

Photo: Facebook/JaffnaKingsSL

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ‘ஜப்னா கிங்ஸ்’ அணி தகுதி பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற போட்டிக்காக தகுதிகாண் போட்டியில் தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த அணியில் அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்களை எடுத்தார்.

இதனை தொடர்ந்து 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இறுதிப் போட்டி 23 ஆம் திகதி இரவு சூரியவெ மகிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்னா கிங்ஸ் அணி மோதவுள்ளளது.