July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2022: புதிய அணிகளுக்கு தலைவராகும் இளம் இந்திய வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் களமிறங்கும் லக்னோ அணியின் தலைவராக கேஎல் ராகுலும், அகமதாபாத் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் அய்யரும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக கமிறங்கவுள்ளன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது.

அனைத்து அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வோர்னர் உட்பட பல முன்னணி வீரர்கள் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ளதால், இந்த மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், அகமதாபாத், லக்னோ அணிகள் இன்னும் தங்களது வீரர்கள் குறித்த அறிவிப்பு ஏதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், லக்னோ அணியின் தலைவராக கேஎல் ராகுலும், ரஷித் கான், இஷான் கிஷன் ஆகியோரை வீரர்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, அகமதாபாத் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் அய்யரையும், வீரர்களாக ஹர்திக் பாண்டியா, டேவிட் வோர்னர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ரசிகர்கள் பெரும் ஆவலோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.