January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 கிரிக்கெட்: சிக்ஸரில் கிறிஸ் கெய்லை முந்திய இலங்கை வீரர்!

டி-20 போட்டிகளில சிக்ஸர்கள் அடிக்கும் வேகத்தில் இலங்கையின் சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

டி-20 போட்டிகளில் சீக்குகே பிரசன்ன ஒவ்வொரு 8.2 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை அடித்துள்ளதாக பிரபல CricViz இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் அண்ட்ரூ ரஸல் முதலிடத்தில் உள்ளார். ரஸல் டி-20 போட்டிகளில் ஒவ்வொரு 7.4 பந்திலும் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் உள்ளார். டி-20 போட்டிகளில் 9.4 பந்துகளில் 6 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார்

இதனிடையே, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களான கிரென் பொல்லார்ட், எர்வின் லூவிஸ், நிக்கொலஸ் பூரான் மற்றும் இங்கிலாந்தின் பென் கட்டின் போன்ற வீரர்கள் முறையே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.