November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

Photo: Twitter/Cricket Australia

கெரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று அடிலெய்டில் 2 ஆவது டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆரம்பமாகியது.

இதனிடையே, இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பட் கம்மின்ஸுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக, அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை இந்த முடிவை அதிரடியாக எடுத்துள்ளது.

ஆனால், மெல்போர்னில் நடைபெற இருக்கும் ‘பொக்சிங் டே’ டெஸ்ட்டில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மூன்றரை ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்துகிறார்.