May 24, 2025 12:50:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2023 இல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆப்கானிஸ்தான் அணி

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் பங்கேற்கும் போட்டிகள் தொடர்பான விபரம் வெளியானது. இதன்படி 37 ஒருநாள், 12 டி–20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

இதுதவிர, 3 டெஸ்ட், ஆசிய கிண்ணம், டி–20 உலகக் கிண்ணம் (2022), ஒருநாள் உலகக் கிண்ணம் (2023) உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்கிறது.

இதன் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இங்கு முதன் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள், திகதிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன் 2012 டி–20  உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வந்து விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.