January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகல்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து உப தலைவர் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென்னாபிரிக்கா, இந்திய அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய அணி தனி விமானம் மூலம் 16 ஆம் திகதி தென்னாபிரிக்கா புறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவர் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

மும்பையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக 30 வயதான பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரியங் பஞ்சால் அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க A தொடரில் இந்திய A அணியை வழிநடத்தி அதிபட்சமாக 96 ஓட்டங்களை எடுத்தார்.உள்ளூர் போட்டியில் அனுபவ வீரராக பார்க்கப்பட்ட பிரியாங் பாஞ்சலுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

முன்னதாக இந்தத் தொடரிலிருந்துதான் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவர் என அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதால், உப தலைவர் குறித்த தகவல் எதுவும் பிசிசிஐ அறிவிப்பில் இடம்பெறவில்லை.